College Anthem


வாழிய யாழ்நகர் இந்துக் கல்லூரி
வையகம் புகழ்ந்திட என்றும் (வாழி)

இலங்கை மணித்திரு நாட்டினில் எங்கும்
இந்து மதத்தவர் உள்ளம்
இலங்கிடும் ஒருபெருங் கலையகம் இதுவே
இளைஞர்கள் உளம் மகிழ்ந் தென்றும்

கலைபயில் கழகமும் இதுவே பல
கலைமலி கழகமும் இதுவே – தமிழர்
தலைநிமிர் கழகமும் இதுவே!

எவ்விடமேகினும் எத்துயர் நேரினும்
எம்மன்னை நின்னலம் மறவோம்
என்றுமே என்றுமே என்றும்
இன்புற வாழிய நன்றே
இறைவன தருள்கொடு நன்றே!

ஆங்கிலம் அருந்தமிழ் ஆரியம் சிங்களம்
அவைபயில் கழகமும் இதுவே!
ஓங்குநல் லறிஞர்கள் உவப்பொடு காத்திடும்
ஒருபெருங் கழகமும் இதுவே!
ஒளிர்மிகு கழகமும் இதுவே!
உயர்வுறு கழகமும் இதுவே!
உயிரின கழகமும் இதுவே!

தமிழரெம் வாழ்வினிற் தாயென மிளிரும்
தனிப்பெருங் கலையகம் வாழ்க!
வாழ்க! வாழ்க! வாழ்க!

தன்னிகர் இன்றியே நீடு
தரணியில் வாழிய நீடு!